லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் நன்றி அறிவிப்பு விழா நடத்தினர். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. […]
Category Archives: தமிழ் சினிமா
பிரீத்தி முகுந்தன் அறிமுகம் செய்த குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0
தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் ‘குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0’ நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் நடைபெற்றது. நகை அறிமுகம் குறித்து இயக்குனர் ஏ வி ஆர் சித்தாந்த் கூறியதாவது: “எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு […]
“உமாபதியா… எனக்கு ஒரே ஷாக்!” – மாமனார் அர்ஜுன்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பில் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அர்ஜுன், தம்பி ராமையா, உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது மகளின் திருமணம் குறித்துப் பேசிய அர்ஜுன், “நடிகர் தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாடு உள்ள குடும்பம். நானும் தம்பி ராமையாவும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். […]
ஆட்டோ ஓட்டுநரை இயக்குநர் ஆக்கிய லாந்தர்!
கமலா திரையரங்கில் நடைபெற்ற லாந்தர் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, […]
லைகாவின் அடுத்த படம் லாக் டவுன்
இற்போது இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களுடன், பல தரமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லாக்டவுன் படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். புதுமையான திரைக்கதையில் லாக் டவுன் காலகட்டத்தில் நடக்கும், ஒரு அழகான படைப்பாக உருவாகும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் ஏ ஆர் ஜீவா இயக்குகிறார். பிரேமம் படம் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது தில்லு ஸ்கொயர் படம் மூலம், தென்னிந்திய சினிமாவை […]
புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’!
இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ […]
எலான் மாஸ்கால் ‘உலக லெவலில் ஃபேமஸ்’ ஆன தப்பாட்டம்!
துரை சுதாகரும் நடிகை டோனா ரொசாரியோவும் இணைந்து ‘தப்பாட்டம் ‘ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள். ஓர் இளநீரில் கதாநாயகி டோனா ஸ்ட்ரா போட்டுக் குடிப்பார். கதாநாயகி வாயிலிருந்து துரை சுதாகர் இன்னொரு ஸ்றாவில் உறிஞ்சிக் குடிப்பார். இப்படி ஒரு காட்சி ‘தப்பாட்டம்’ படத்தில் இடம்பெற்றது. அந்தப்படத்தின் விளம்பரத்திலும் அந்தக் காட்சி படம் இடம் பெற்றிருக்கும். இணையத்தில் புழங்கும் இந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தை ட்விட்டர் தளத்தின் (இப்போது எக்ஸ் தளம்) உரிமையாளர் எலான் மாஸ்க் பார்த்துப் பாராட்டி […]
ஹரா முதல் நாள் வசூல்… மவுசு குறையாத மோகன்!
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கும் வெளியாகி உள்ள ‘ஹரா’, திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் ‘ஹரா’ படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். ‘ஹரா’ […]
வெப்பன் பட விமர்சனம்
சூப்பர் ஹ்யூமன் அதாவது அதிசய சக்தி மிக்க மனிதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் வெப்பன் (Weapon). அதாவது ஹாலிவுட் படங்களில் வரும் அதி உச்ச நாயகன் பாத்திரத்தை மையப்படுத்தி தமிழில் ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள். தொடக்கமே சற்று வித்தியாசமாகத்தான் யோசித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, யாராலும் அழிக்க முடியாத வீரர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது ஹிட்லரின் நாஜிப் படை அதில் பங்கேற்கும் ஒரு தமிழர், அந்த அதிசய மனிதர்களை உருவாக்கும் திறன்மிக்க திரவத்தை எடுத்துக் கொண்டு […]
பிதா… மண் சார்ந்த ஒரு த்ரில்லர் திரைப்படம்!
மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் பிதா படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், “திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய […]