மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! – மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடத்தைபெற்ற மன்னன் ராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய மாவீரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல […]

சர்தார் வெற்றி… இயக்குநர் மித்ரனுக்கு சொகுசு கார் பரிசளித்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்தப் படம் தீபாவளி அன்று வெளியானது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம், இந்திய உளவாளி ஒருவரின் கதை. படத்தின் காட்சியமைப்பு, கார்த்தியின் நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு காரணமாக நல்ல வரவேற்பைப் பெற்றது சர்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் […]

புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா – தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் ரஜினிகாந்த்

பெங்களூரு: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். 45 வயதில் அவர் மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமல்ல, கன்னட மக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் திரைத்துறையில் பணியாற்றி கொண்டே, மற்றொருபுறம் சமூக சேவைகளை ஆற்றி வந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் […]

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… ஆரஞ்சு எச்சரிக்கை… பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழ் நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை […]

காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியா முழுமைக்குமான திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால், ஒரு வாரம் கழித்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் இப்படத்தை வெளியிட்டனர். மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வெளியான அனைத்து மொழிகளிலுமே வசூல் வேட்டை செய்து வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் இந்தியில் தீபாவளிப் […]

ரஜினி நடிக்கும் இரு புதிய படங்களைத் தயாரிக்கிறது லைகா நிறுவனம்!

சென்னை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிகேஎம் தமிழ்க் குமரன். சில நிமிட சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த தமிழ்க் குமரன், “தற்போது ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்துக்குப் பிறகு, லைகா நிறுவனத் தயாரிப்பில் இரண்டு புதிய படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற […]

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காக்க முன்வந்த கலைப்புலி தாணு!

சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு […]

காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி!

டெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து […]

ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்தான்! – முன்னனி விநியோகஸ்தர் பேச்சு

சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று இந்தப் படம் திரைக்கு வரும் பிரின்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பிரபல தமிழ் சினிமா விநியோகஸ்தர் அன்புச்செழியன் சிவகார்த்திகேயன் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பிரின்ஸ் படத்தை தமிழகம் முழுவதும் எங்களது நிறுவனம் மூலமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். […]

ஜெயலலிதா மரணம்… சசிகலா உள்பட 4 பேர் குற்றவாளிகள்! – ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் செயல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 […]