ஷாkoர்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் படமாக உருவாகி இருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது: “நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் […]
Author Archives: Dhina Cheithi
இயக்குநர்களின் சங்கமமான ஹிட் லிஸ்ட் இசை வெளியீடு!
ஹிட் லிஸ்ட் படத்தின் முன்னோட்டம் மட்டும் இரண்டு பாடல் வரிக் காணொளிகள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை’சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், R.V.உதயகுமார், பி.வாசு, இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கே. பாக்யராஜ், சந்தான பாரதி, ஆர்.பார்த்திபன், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் […]
கூலியில் நடிக்கிறேனா? அர்ஜுன் தாஸ் பதில்!
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் […]
ஜூன் 27ல் உலகெங்கும் கல்கி 2898 AD
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என […]
இசை பெரிதா? மொழி பெரிதா? – இது வைரமுத்துவின் விளக்கம்
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலாஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் தற்கால நிலைமை என்ன, கதைகளின் போக்கு என்ன, திரையரங்குகளின் நிலைமை என்ன, தயாரிப்பாளர்களின் கலவரம் என்ன என்று ஆதங்கத்தைக் […]
கவின் + யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம்
‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக […]
சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் டீஸர் வெளியீடு… இயக்குநர் பாலா வாழ்த்து
ராமம் ராகவம் பட டீஸர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு பேசியது: “சமுதிரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்த படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப்படம் உருவாக மிக முக்கியக்காரனமாக இருந்தவர் கனி அண்ணன்தான். தந்தை மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” நடிகை மோக்ஷா “தமிழில் இது என்னுடைய முதல் படம். எனக்கு தமிழ் திரைப்படங்களை மிகவும் பிடிக்கும் தமிழ் ரசிகர்களையும் […]
‘டியர்’ படத்தின் வெற்றியால் படக்குழு உற்சாகம்!
நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் வெளியான பிறகு […]
நாகபந்தம் – தி சீக்ரெட் ட்ரெஷர்
அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து, அபிஷேக் நாமா இயக்கத்தில் ‘நாகபந்தம்’, பான் இந்தியத் திரைப்படத்தை உருவாக்குகிறது. கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் அபிஷேக் நாமா. இயக்குநராக டெவில் மூலம் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்த பிரம்மாண்டமான படத்தில் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தவுள்ளார். அபிஷேக் நாமா, ஆன்மீக மற்றும் சாகசங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். தேவன்ஷ் நாமா இப்படத்தை வழங்குகிறார், […]
சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்!
சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், […]