‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

  இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலரில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளன. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் […]

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் கிங்ஸ்டன்!

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் படம் இந்த வாரம் வெள்ளைத் திரையைத் தொடுகிறது. முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள […]

தொடங்கியது செல்வராகவன் – ஜிவியின் மென்டல் மனதில்!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ஜிவி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘ மெண்டல் மனதில் ‘ எனும் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் […]

‘டியர்’ படத்தின் வெற்றியால் படக்குழு உற்சாகம்!

  நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் வெளியான பிறகு […]

ஜிவி பிரகாஷ் – சீனு ராமசாமி கூட்டணியில் இடிமுழக்கம்!

சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘இடிமுழக்கம்’. இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பு இது.

பேச்சிலர்’ என் வழக்கமான படமல்ல! – ஜி வி பிரகாஷ்

ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசுகையில், “3 வருடத்துக்கு […]