வெப்பம் குளிர் மழை விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பெத்த பெருமாள் – பாண்டி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இதனால் வீட்டிலும், ஊரிலும் ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்கள், சாடைப் பேச்சுக்கள். 0ஆண்டியை மலடி என்று மாமியாரே திட்டுகிறார். குழந்தை இல்லாத குறையைக் காட்டி, தன் மகள் வயிற்றுப் பேத்தியை பெருமாளுக்கு கட்டி வைக்க முயற்சிக்கிறார் அம்மா. ஒரு கட்டத்தில் தன் கணவனை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செய்ய வைக்கிறார் பாண்டி. பரிசோதனையில் […]

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்! – முக ஸ்டாலின் அதிரடி

திருநெல்வேலி: “மக்கள் இடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்ட நாம் நமது சகோதர, சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்” என்று திருநெல்வேலியில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் […]

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. முன்னணி நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், யோகி பாபு l உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. கடந்த மார்ச் 15ம் தேதி, மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு […]

இளையராஜாவும் பாரதிராஜாவும் தமிழ் சினிமாவின் இலக்கணம்!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன் பேசுகையில், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் […]

ஸ்ருதி ஹாஸன் – லோகேஷ் கனகராஜின் ரொமான்டிக் ஆல்பம்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இணக்கமான ரொமான்ஸில் இருவரும் நடித்துள்ளனர். ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆல்பம் பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தீமநதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாடல் எப்படி? – […]

ஆடுஜீவிதம்’ கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்!’ – ஏ ஆர் ரஹ்மான்

ஆடுஜீவிதம்’ கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்!’ – ஏ ஆர் ரஹ்மான் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை பிளெஸ்ஸி […]

J.பேபி… ஒரு படம் நமக்குள் என்னவெல்லாம் நிகழ்த்தும்!

  ஒரு படம் நமக்குள் என்ன பண்ணிவிடும்? நம்மை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போய் நிறுத்துமா? எல்லா உறவுகளுக்கும் நமக்குமான அன்பை, பிரிவை, பிரச்னைகளை மனக்கண்ணுக்குள் கொண்டுவருமா? அம்மாவுக்கு போன் பண்ணி அக்கறையாகப் பேச வைக்குமா? அக்கா, தம்பிக்கு நேரம் ஒதுக்கி, “சும்மாதான் பேசினேன்… நல்லாயிருக்கியளா?” எனக் கேட்கச் சொல்லுமா? சிக்கித் திணறும் ஒரு உதவி இயக்குநருக்கு 25,000 பணம் அனுப்பிவைத்து, “என்னால முடிஞ்சது இவ்வளவுதாண்டா… இப்போதைக்குச் சமாளி… அடுத்து வாரதைப் பார்த்துக்கலாம்” எனத் தைரியமூட்டுமா? அன்பைத் தவிர […]

இணையம் முழுக்க பேசுபொருளான கமல் – ஸ்ருதி – லோகேஷின் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல்!

நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக இந்தப் பாடலில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் […]

தேர்தல் அறிவிச்சாச்சு!

  டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 17 வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் […]