எலான் மாஸ்கால் ‘உலக லெவலில் ஃபேமஸ்’ ஆன தப்பாட்டம்!

துரை சுதாகரும் நடிகை டோனா ரொசாரியோவும் இணைந்து ‘தப்பாட்டம் ‘ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள். ஓர் இளநீரில் கதாநாயகி டோனா ஸ்ட்ரா போட்டுக் குடிப்பார். கதாநாயகி வாயிலிருந்து துரை சுதாகர் இன்னொரு ஸ்றாவில் உறிஞ்சிக் குடிப்பார். இப்படி ஒரு காட்சி ‘தப்பாட்டம்’ படத்தில் இடம்பெற்றது. அந்தப்படத்தின் விளம்பரத்திலும் அந்தக் காட்சி படம் இடம் பெற்றிருக்கும். இணையத்தில் புழங்கும் இந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தை ட்விட்டர் தளத்தின் (இப்போது எக்ஸ் தளம்) உரிமையாளர் எலான் மாஸ்க் பார்த்துப் பாராட்டி […]

3வது முறையாக பிரதமர் பதவி ஏற்றார் நரேந்திர மோடி

டெல்லி: நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் ‘பாரத் […]

ஹரா முதல் நாள் வசூல்… மவுசு குறையாத மோகன்!

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கும் வெளியாகி உள்ள ‘ஹரா’, திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் ‘ஹரா’ படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். ‘ஹரா’ […]

வெப்பன் பட விமர்சனம்

சூப்பர் ஹ்யூமன் அதாவது அதிசய சக்தி மிக்க மனிதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் வெப்பன் (Weapon). அதாவது ஹாலிவுட் படங்களில் வரும் அதி உச்ச நாயகன் பாத்திரத்தை மையப்படுத்தி தமிழில் ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள். தொடக்கமே சற்று வித்தியாசமாகத்தான் யோசித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, யாராலும் அழிக்க முடியாத வீரர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது ஹிட்லரின் நாஜிப் படை அதில் பங்கேற்கும் ஒரு தமிழர், அந்த அதிசய மனிதர்களை உருவாக்கும் திறன்மிக்க திரவத்தை எடுத்துக் கொண்டு […]

பிதா… மண் சார்ந்த ஒரு த்ரில்லர் திரைப்படம்!

  மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் பிதா படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், “திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய […]

பிடி சார்… ஐசரி ரொம்ப ஹேப்பி சார்!

தமிழ் திரையுலகில் படமெடுக்கும் தயாரிப்பளர்கள் கணிசமாகக் குறைந்து வருவதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள். இந்த சூழலிலும் தொடர்ந்து படம் தயாரிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் முக்கியமானவர் ஐசரி கே கணேஷ். லாப நஷ்டம் பற்றி மட்டுமே பார்க்காமல் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியான பிடி சார் படம் நல்ல வெகற்றியைப் பெற்றுள்ளது. மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]

ஹரா பட விமர்சனம்

  கோவையில் மனைவி மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் மோகனுக்கு திடீரென ஒரு அதிர்ச்சி. அவரது மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. பெயரை இப்ராகிம் என்று மாற்றிக் கொண்டு மகளின் தற்கொலைக்குக் காரணம் தேடிப் புறப்படுகிறார் மோகன். இதற்கிடையில் மோகனால் முன்பு பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார். மகளின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாரா, அவரைத் தேடிக் கொண்டிருந்த காவலர் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை. 14 […]

’அஞ்சாமை’ படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டு!

  தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், கமர்ஷியல் வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல தரமான படைப்புகள் மக்களை சென்றடைய வேண்டும், நல்ல படைப்பாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்கிற நோக்கில் படங்களை வெளியிட்டுவருகிறது. ஜோக்கர், அருவி, பர்ஹானா, கடந்த வருடம் வெளியான இறுகப்பற்று என தொடர்ந்து வித்தியாசமான, அதேசமயம் சமூக விழிப்புணர்வுக்கான படங்களை கொடுத்து வருகிறது. அந்தவரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் வெளியாகியுள்ள படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் […]

தனி பெரும்பான்மை இல்லை… கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக: 3-வது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி!

டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. […]

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட முதல் தோற்றம்!

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், […]