சென்னை: தமிழகம், ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தொடங்கும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றைய வானிலை குறித்து இயக்குனர் புவியரசன் […]
Category Archives: தலைப்புச் செய்தி
திடீர் சந்திப்பு… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இன்னும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்து […]
பெரியார், அம்பேத்கர் பேசியதைத்தானே திருமாவளவனும் பேசினார்? – முக ஸ்டாலின்
சென்னை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”, என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், […]
‘அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திடுவோம்!’
பாஜக அரசின் முன்வைப்புகளில் ஒன்றான இந்த ‘உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்’ (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக் கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது. அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்ய முயற்சி! – முக ஸ்டாலின்
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “நீட் தேர்வைப் பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் குளறுபடி ஏற்படுகிறது. ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிடில் […]
ஊழல் திமுக… ஒரே மாற்று மருந்து ரஜினிதான்! – தமிழருவி மணியன்
அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வணக்கம். முன்னாள் அமைச்சர் திரு.பொன்முடியின் மகன் திரு.கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகள் திரு. பொன்முடி கலைஞர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உயர் கல்வி […]
ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: வழக்கை வாபஸ் வாங்கினார் ரஜினி
சென்னை: கொரோனா பொது முடக்க காலத்தில் திறக்கவே இல்லாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட 6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரை ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரிக்கு எதிரான இந்த வழக்கு, இன்று புதன்கிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், தனது ஆலோசகர் […]
‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்
சென்னை: பதவிக்காக – ஊழலுக்காக, ‘நீட் தேர்வில்’ தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க […]
‘கொரோனா… இனிமேல்தான் ஆபத்து ரொம்ப அதிகம்!’ – பிரபல மருத்துவர் எச்சரிக்கை
உலகெங்கும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது போல் செய்திகள் வருகின்றன. நம்மில் பலரும், உற்றார் உறவினர் இதனால் பாதிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து, அலட்சியம் கூடி வருகிறது… இன்னும் ஒரு மாதத்தில் இதன் தீவிரம் கூடும் அபாயம் இருக்கிறது. பல மருத்துவர்கள், தொலை-சிகிச்சை முறையில் இணைய-கணினி வழியாகவே பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, பேசி, சிகிச்சைகள் பரிந்துரைக்கிறார்கள். என்னால் அது முடியவில்லை. என்னிடம் வருபவர் எப்படி உள்ளே நுழைகிறார் என்பதிலிருந்து நான் சொல்வதற்கு என்ன […]
கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனைகளை முடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் 3-ம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது, தடுப்பூசி […]