அரியலூர்: மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் […]
Category Archives: தலைப்புச் செய்தி
‘லாபம்’ பார்க்கலாம்!
பொருளாதார அதிகாரமே அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற நவீன கார்ப்பரேட் உலகமயச் சூழலில் ‘தொழிலாளர் ஒற்றுமை’ எனும் கம்யூனிச அரிவாளை தனது திரைப்படைப்பில் கூர் தீட்டி தந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தோழர் பி.எஸ்.ஆர் (பி.சீனிவாசராவ்) பெயரிலான சங்கம், கூட்டுப் பண்ணை விவசாயம், தலித் மக்களுக்கான நில உரிமை என 1970களுக்கு முந்தைய கீழத்தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட்டுகளின் முன்னெடுப்புகளை இன்றைய சூழலுக்கேற்ப முன்மொழிகிறது ‘லாபம்”. தென்பரையில் தோழர் பி.எஸ்.ஆர் கட்டமைத்த விவசாயிகள் சங்கத்திற்கும் வெண்மணியில் ஒரே குடிசைக்குள் […]
3 ஆண்டுகளில் சசிகலாவின் ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்!
சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர். அத்துடன், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் வருமான […]
தலிபான் ஆட்சியில் ஆப்கனில் எப்படி இருக்கிறது மக்கள் நிலை?
காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இப்போது முழுக்க முழுக்க தலிபான்களின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் உள்ளது அந்நாடு. தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் மக்கள் எப்படி உள்ளனர்? ‘அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்’ என்பதுதான் இப்போதைக்கு அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள். மக்களை தலிபான்கள் தினம் தினம் தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆப்கன் மக்களில் பெரும்பாலானோர் எப்படியாவது வேறு நாட்டுக்கு – அமெரிக்கா என்றல்ல, பக்கத்தில் உள்ள உஸ்பெக்கிஸ்தான் […]
4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதமும் (127 ரன்கள்), புஜாரா (61 ரன்கள்), ரிஷாப் பண்ட் (50 ரன்கள்), ஷர்துல் […]
தடை நீங்கியது… மீண்டும் பிஸியாகும் வடிவேலு!
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார். இதுகுறித்து வடிவேல் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நடிப்பதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது மகிழ்ச்சி. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 படங்களில் நடிக்க இருக்கிறேன். […]
காபூல் விமான நிலையத்தில் 150 இந்தியர்களைச் சிறைப்பிடித்த தலிபான்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்த நாட்டை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். ஒவ்வொரு நகராக கைப்பற்றிய அவர்கள் இறுதியாக தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பரிதவித்தனர். தலிபான்கள் தாக்குதல்களை அதிகப்படுத்த தொடங்கியபோதே வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. அங்கு இருக்கும் வெளிநாட்டினரை அழைத்து வர அந்தந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளை […]
நூறு நாள் சாதனையா? வேதனையா?
திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நூறு நாட்களைக் கடந்துள்ளது; இன்றும் சாதனைகளை விளக்கி நாளிதழ்களில் விளம்பரங்கள் தொடர்கின்றன. ஆளவந்தாருக்கு வேண்டியவர்கள் ஆதரவாகவும், எதிர்க்கட்சியினர் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக பார்த்தோம் எனில் ஆட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை என்பதையே நாம் மீண்டும், மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சட்டமன்றத்தில் வெளிநடப்புகள் தொடங்கிவிட்டன; இப்போது வெளியில் அதிமுக. சட்டைக் கிழிப்பு காட்சிகள் அரங்கேறும் நாளை விரைவில் நாம் சந்திக்க நேருமோ? […]
எதற்கும் துணிந்தவன்…. இது சூர்யா!
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் சூர்யாவின் 40வது படமாகும். நாளை (ஜூலை 23) சூர்யா தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அதைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படத்தின் […]
இந்தியாவில் மேலும் 41383 பேருக்கு கொரோனா!
டெல்லி: கொரோனா 2வது அலையில் இதுவரை பார்த்திராத அளவுக்கு நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், […]