‘சொல்லி அடிச்சிருக்கார் சிவா…’ – அண்ணாத்த வெற்றி குறித்து ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த மற்றும் விஸ்வாசம் திரைப்படம் தொடர்பாக தனது ஹூட் பக்கத்தில் பேசியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஹூட்டில், “பேட்டை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலா, கபாலி திரைப்படங்களின் வயசான ரோல் பண்ணியிருந்தேன். பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ஸ்டைலிஷாக காட்டி இருந்தார். பேட்ட படத்துடன் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. பேட்ட, விஸ்வாசம் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. விஸ்வாசம் திரைப்படம் இவ்வளவு பெரிய ஹிட் […]

வன்னியர் சங்க மிரட்டல்… சூர்யாவுக்கு குவியும் ஆதரவு!

    ஜெய் பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுவெளியில் சூர்யாவுக்கு பெரும் ஆதரவு குவிகிறது. வன்னியர் அமைப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் […]

அண்ணாத்த-வை ஆபாசமாகப் பேசியவர்களைக் கைது செய்ய போலீசில் புகார்… முதல்வருக்கும் கோரிக்கை!

ரஜினி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். வெளிநாடுகளில் மட்டும் 1100 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்தது. குடும்பப் படமாக அமைந்துள்ள அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர். விமர்சகர்கள் அண்ணாத்த படத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறி வந்தனர். ஆனால் பொதுமக்கள், பெண்கள் குடும்பத்துடன் பார்த்து ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் படம் 10 […]

விமர்சனங்களைத் தகர்த்து… ரூ 250 கோடி வசூலை நெருங்கும் ரஜினியின் அண்ணாத்த!

சென்னை: சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிபில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி நாளன்று உலகெங்கும் 2300க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்து அதிகபட்ச எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அண்ணன் – தங்கை பாசம், குடும்ப உறவுகளின் மேன்மையைப் பேசிய இந்தப் படத்தை முதல்நாளிலிருந்தே மக்கள் குடும்பம் குடும்பமாகப் பார்க்கத் […]

டி20 உலகக் கோப்பை… முதல்முறையாக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா!

  துபாய்: ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய […]

ஐஎம்டிபியில் முதல் இடம் பிடித்து ‘ஜெய் பீம்’ சாதனை!

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். […]

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!

சென்னை: சென்னையில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது. நேரம் செல்லசெல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு கனமழை பெய்தது. நள்ளிரவு அதி கனமழை பெய்ய ஆரம்பித்தது. இன்று காலையிலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் நேற்றிரவில் இருந்து இன்று காலை 12 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் […]

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் இன்று முதல் ‘ஜெய் பீம்’!

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இன்று வெளியானது. அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று காலை வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் இப்படம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞராக, […]

ரஜினிகாந்த் வீடு திரும்புவது எப்போது? – மருத்துவமனை அறிக்கை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை […]

கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்

பெங்களூரு: கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார். உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை […]