தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பில் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அர்ஜுன், தம்பி ராமையா, உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது மகளின் திருமணம் குறித்துப் பேசிய அர்ஜுன், “நடிகர் தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாடு உள்ள குடும்பம். நானும் தம்பி ராமையாவும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். அப்போது தெரியாது அவர் எனக்கு சம்பந்தி ஆவார் என்று.

அதேபோல நான் தென்னாப்பிரிக்கா சென்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார். மிகவும் திறமைசாலி, பண்பாளர், அமைதியானவர் மற்றும் நகைச்சுவை குணம் கொண்டவர். அப்போது உமாபதி தனக்கு மருமகனாக வருவார் என்று தெரியாது. ஒருநாள் என் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். அப்போதே எனக்கு தெரியும். இது காதல் விஷயமாக இருக்கும் என்று.

அதேபோல தான் காதலிப்பதாக கூறினார். அதற்கு நான் பையன் யாரென்று கேட்டேன், உமாபதி என்று கூறினார். நான் ஷாக் ஆகிவிட்டேன். ஏனென்றால் அவரை அந்த நிகழச்சியின் மூலம் எனக்கு முன்பே தெரியும். பிறகு நான் ஓகே சொல்லி விட்டேன். உமாபதி ஒரு திறமைசாலி, விரைவில் நீங்கள் ஒரு ஆக்ஷன் கிங்கை பார்க்கலாம். நான் என்னுடைய மருமகன் என்று கூறவில்லை. உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் இவர்கள் இருவருக்கும் வேண்டும்,” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, “எங்கள் குடும்பத்திற்கு மருமகளாக ஐஸ்வர்யா வந்தாலும், அவர் எங்களுக்கு மகள்தான். அது மட்டும் இல்லாமல் தன் மருமகளிடம், தாயாக இருந்து இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்றுதான் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். அதேசமயம் என் மகள் திருமணத்திற்கான மருமகனை தேர்வு செய்யும் பணியையும் என் மகனிடம் கொடுத்தேன். அதேபோல் அவனுடைய வாழ்க்கையும் அவனே தேர்வு செய்து கொண்டான்,” என்றார்.

ரஜினி வாழ்த்து

கவுண்டமணி

கலைப்புலி தாணு

இயக்குநர் ஷங்கர்

விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *