“பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது” – வைகோ

  மதுரை: “பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50 வது நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமூக நீதியின் வடிவமாக பெரியார் திகழ்கிறார். பெரியாரால் உலகெங்கும் சமூக நீதி தழைத்துள்ளது. அவரை இளைஞர்கள் […]

எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்!

சென்னை: அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று டிசம்பர் 24-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற […]

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு… ஃபைட் கிளப்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். அந்த பேனரில் வெளியாகும் முதல் தயாரிப்பு ஃபைட் கிளப். இப்படதை அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்குகிறார். உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை […]

அமீர் பற்றி அநாகரீக பேச்சு: வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. ஞானவேல் ராஜாவின் இந்தப் பேட்டிக்கு எதிராக திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மூத்த இயக்குநர் பாரதிராஜா உள்பட தமிழ் திரைப்பட படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், […]

‘வள்ளி மயில்’ திரைப்பட டீசர்  வெளியீட்டு விழா!

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்’. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த […]

வெளியானது ஷாரூக்கானின் டங்கி படத்தின் முதல் பாடல்!

  ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவாகியுள்ள டங்கி படத்தின் இசைப் பயணம் தொடங்கியுள்ளது. படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா…” உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் […]

சில நொடிகளில்… பட விமர்சனம்

  நடிகர்கள்: ரிச்சர்ட், யாஷிகா ஆனந்த், புன்னகைப்பூ கீதா ஒளிப்பதிவு: அபிமன்யு இசை: ரோகித் குல்கர்னி தயாரிப்பு: புன்னகைப்பூ கீதா இயக்கம்: வினய் பரத்வாஜ் உலகப் புகழ் அழகு சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் லண்டனில் வசிப்பவர். அங்கே அவருக்கு சொந்தமாக மருத்துவமனை. ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். அவர் மனைவி கீதா. தன்னிடம் அழகு சிகிச்சைக்காக வரும் மாடலான யாஷிகா ஆனந்தைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் ரிச்சர்ட். யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் நேரம் பார்த்து, மனைவி கீதா நண்பர்களுடன் வீட்டுக்கு வந்துவிட […]

லாக்கர்…. விறுவிறு கொள்ளை த்ரில்லர்!

தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ 5-க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார். கதாநாயகியாக […]

ஒரே இடத்தில் தலைவர் 170, இந்தியன் 2… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் சந்திப்பு!

  முன்பெல்லாம் படப்பிடிப்புத் தளங்களில் இருவேறு படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் சந்திப்பதும், அது பற்றிய புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தொலைத் தொடர்பு வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்களுக்கிடையிலான இடைவெளியும் அதிகரித்துவிட்டதால், இந்தத் தலைமுறை நடிகர்களிடம் அத்தகைய சந்திப்புகளைப் பார்க்க முடிவதில்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள் ரஜினியும் கமலும். லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் […]

‘சூரகன்’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு

தேர்டு ஐ சினி கிரியேசன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரகன்’. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசுகையில், “சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் […]