எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்!

சென்னை: அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று டிசம்பர் 24-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற […]

மக்கள் திலகம் எம்ஜிஆரின் அரசியல் நாகரீகத்தை இப்போதுள்ளவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தவறுதான்! – முக ஸ்டாலின்

தேனி: தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை பகுதியில் நடந்தது. விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “நாட்டுக்கு உழைக்கவும் நல்ல விஷயங்களைச் செய்யவுமே நமக்கு நேரம் போதவில்லை. தேவையற்றவற்றைப் பேச நமக்கு நேரமில்லை. நம்முடைய தலைவர் கலைஞரிடம் ஒரு பத்திரிகை நிருபர், ‘உங்கள் மகன் ஸ்டாலினைப் […]

ரஜினி புதிய கட்சி… அதிமுகவின் சைதை துரைசாமி பகிரங்க ஆதரவு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நேற்று அறிவித்தார். இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு” என்று சொல்லி இருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972-ல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றத்தைப்போல அமையக்கூடிய திருப்பத்தை, ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் […]