ரஜினி மகள் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா?

  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ […]

அண்ணன் அழைத்தார்… மகிழ்ச்சியான சந்திப்பு! – 13 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவைச் சந்தித்த கங்கை அமரன்

3இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். கங்கை அமரனை பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக திரையில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப் பூவே.. தான் கங்கை அமரன் எழுதிய முதல் பாடல். அந்தப் பாடல் தொடங்கி, ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை தன் அண்ணன் இசையில் எழுதியுள்ளார் கங்கை அமரன். இவற்றில் பெரும்பாலானவை மெகா ஹிட் பாடல்கள். இளையராஜா தயாரித்த கோழி கூவுது படத்தில் இயக்குநராக அறிமுகமான […]

மாமனிதன் முன்னோட்டம்

பெரும் எதிர்பார்ப்புகிடையே நேற்று வெளியான மாமனிதன் ட்ரைலர் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இளையராஜா பாடல்களில் நாம் மயங்கிக் கிடப்பது ஏன்?

இளையராஜா இசையமைத்த பாடல்களின் மிகச்சிறந்த தன்மைகள் எவை ? நாம் அவருடைய பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? 1. ஒரு பாடலின் முதற்சொல் தொடங்குவதற்கு முன்பாக முதல் இருபது நொடிகள் அல்லது முப்பது நொடிகளுக்கு ஒரு முன்னிசை அமைத்திருப்பார். அந்த முன்னிசையின் இன்பத் திகைப்பிலிருந்து தப்பித்து நாம் நடுநிலைக்கு வருவதற்குள் அந்தப் பாடலின் முதல் வரி தொடங்கும். வேறு வழியின்றி அந்தப் பாடலுக்குள் நாம் நம்மையறியாமல் மூழ்கத் தொடங்குவோம். ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ முதல் ’ராக்கம்மா கையத் […]

‘கோவிலுக்கு வந்தது போலிருக்கு!’ – இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி. இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இளையராஜாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய ரஜினி, இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவுக்கு அவருடன் சென்றுள்ளார். ஸ்டூடியோவை சுற்றிப் பார்த்து வியந்த ரஜினி, ‘கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு […]

காணாமல் போகும் ஸ்டுடியோக்கள் பட்டியலில் பிரசாத் ஸ்டுடியோவும் இணையட்டும்! – இளையராஜா

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரில் இன்று புதிய ஸ்டுடியோவைத் திறந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் திரையரங்கை விலைக்கு வாங்கி, அதைப் புதுப்பித்து இளையராஜா ஸ்டுடியோ எனப் பெயர் சூட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பாடல் பதிவு இந்த ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. புதிய ஸ்டுடியோ திறப்பையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “ஒரு காலத்தில் சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிப் படங்கள் […]

நிபந்தனைகளுடன் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கத் தயார்! – பிரசாத் ஸ்டுடியோ

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு […]

‘பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை ஒரு நாள் கூட அனுமதிக்க முடியாது!’

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில், இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு மனு […]

இளையராஜா இசையில் ‘தேசிய தலைவர்’

மறைந்த மக்கள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ எனும் பெயரில் படமாகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் […]