‘சொல்லி அடிச்சிருக்கார் சிவா…’ – அண்ணாத்த வெற்றி குறித்து ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த மற்றும் விஸ்வாசம் திரைப்படம் தொடர்பாக தனது ஹூட் பக்கத்தில் பேசியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஹூட்டில், “பேட்டை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலா, கபாலி திரைப்படங்களின் வயசான ரோல் பண்ணியிருந்தேன். பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ஸ்டைலிஷாக காட்டி இருந்தார். பேட்ட படத்துடன் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. பேட்ட, விஸ்வாசம் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. விஸ்வாசம் திரைப்படம் இவ்வளவு பெரிய ஹிட் […]

அண்ணாத்த-வை ஆபாசமாகப் பேசியவர்களைக் கைது செய்ய போலீசில் புகார்… முதல்வருக்கும் கோரிக்கை!

ரஜினி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். வெளிநாடுகளில் மட்டும் 1100 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்தது. குடும்பப் படமாக அமைந்துள்ள அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர். விமர்சகர்கள் அண்ணாத்த படத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறி வந்தனர். ஆனால் பொதுமக்கள், பெண்கள் குடும்பத்துடன் பார்த்து ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் படம் 10 […]

விமர்சனங்களைத் தகர்த்து… ரூ 250 கோடி வசூலை நெருங்கும் ரஜினியின் அண்ணாத்த!

சென்னை: சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிபில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி நாளன்று உலகெங்கும் 2300க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்து அதிகபட்ச எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அண்ணன் – தங்கை பாசம், குடும்ப உறவுகளின் மேன்மையைப் பேசிய இந்தப் படத்தை முதல்நாளிலிருந்தே மக்கள் குடும்பம் குடும்பமாகப் பார்க்கத் […]

ரஜினிகாந்த் வீடு திரும்புவது எப்போது? – மருத்துவமனை அறிக்கை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை […]

‘சாரல் சாரல் காற்றே…’ – அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியானது!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இதன் முதல் சிங்கிளான ‘அண்ணாத்த அண்ணாத்த….’ என்ற பாடல் கடந்த 4ந்தேதி வெளியானது. டி.இமான் இசையில் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 60 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இன்னமும் ட்ரெண்டிங்கில் உள்ளது அந்தப் பாடல். இந்த நிலையில், நடிகர் […]

வெளியானது அண்ணாத்த’ முதல் பாட்டு!

ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ரஜினியின் அண்ணாத்த. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில், டி இமான் இசையில், விவேகா எழுதியுள்ள ‘அண்ணாத்த அண்ணாத்த…’ பாடல் இன்று மாலை வெளியானது. மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

தீபாவளி… பின்வாங்கிவிட்டதா ரஜினியின் அண்ணாத்த?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், ஒரு மாதம் கழித்து, அதாவது பொங்கல் நெருக்கத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாரமாக தகவல் பரவி வந்தது. ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் 2 தடவை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் ரிலீசுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கவில்லை […]

ஜூன் 20-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். […]

விவேக் விரைந்து நலம் பெற ரஜினி பிரார்த்தனை!

சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் கழித்துதான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக் நலம் பெற திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பிரார்த்தனைகளையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது […]

ஏஆர் ரஹ்மானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், சர்வதேச அளவில் ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார். தற்போது அடுத்த கட்டமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், […]