இந்தியன் 2 படத்தை உலகம் முழுக்க பல ஆயிரம் அரங்குகளில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

அதற்கேற்ற வகையில் படத்தின் விளம்பரப் பணிகள் உலகளவில் வேகமெடுத்து உள்ளது.

ஏற்கெனவே சென்னையில் தொடங்கி, மும்பை, மலேசியா, சிங்கப்பூரிலெல்லாம் படத்தின் புரொமோஷனை நடத்தி முடித்த படக்குழு, அடுத்து துபையில் விண்ணில் பறந்து படத்தினை விளம்பரப்படுத்தினர்.

துபாய் நகரின் கடற்கரை வான் வெளியில் பாராசூட்டில் பறந்தபடி, கம் பேக் இந்தியன் என்ற பாடல் முழங்க, இந்தியன் 2 படம் மற்றும் லைகா நிறுவனப் பெயர் பொறிக்கப்பட்ட கொடி பறந்த வண்ணம் புதுமையாக விளம்பரப்படுத்தி உள்ளனர்.

இது குறித்த வீடியோ இணைய வெளியில் பெருமளவு பரவி உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *