டெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவை இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோன தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐஐடி பேராசிரியர் மனிந்தர […]
Category Archives: தலைப்புச் செய்தி
மும்பை டெஸ்ட்: நியூஸிலாந்தை புரட்டி எடுத்த இந்திய அணி… மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்!
மும்பை: இந்தியா – நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் ட்ராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து […]
மீண்டும் முதல்லருந்தா… இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
மும்பை: தென் ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 33-வயது நபருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்யாண் – டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 33-வயது நபர் தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். இவர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 12 பேர் மற்றும் அடுத்த நிலை தொடர்பில் இருந்த 23 பேரும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் […]
‘எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன!’ – கமல் ஹாஸன் நெகிழ்ச்சி
சென்னை: சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பே இருந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில நாட்கள் கட்டாய ஓய்வில் இருந்து வந்தார். அவர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]
ஜவாத் புயல் கரையைக் கடக்கும் பாதை இதுதான்!
டெல்லி: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்தப் புயல் நாளை ஆந்திரா – ஒடிசா பகுதியை அடையும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியை நெருங்கும் ஜாவித் புயல், நாளை மறுநாள் ஒடிஷாவின் பூரி பகுதியை அடையும். பின்னர் வடகிழக்கு கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் […]
வங்கக் கடலில் புதிய புயல் ஜவாத்..!!
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. அதற்குள், அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் […]
தல-ன்னு என்னை அழைக்காதீங்க! – அஜித் அவசர அறிக்கை
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. அஜித் சார்பில் அவரது மேலாளரும் பிஆர்ஓவுமான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அந்த அறிக்கை: “இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ […]
உஷார்…. அடுத்தடுத்து உருவாகும் இரு புயல்கள்!
. சென்னை: வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமுதல் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதாக எதிர்பார்க்கப்பட்டது. […]
ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் 25வது நாளாக கெத்து காட்டும் அண்ணாத்த!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியானது அண்ணாத்த படம். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், அந்தப் படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படத்தைக் கண்டு மகிழ்ந்தனர். இதனால் படம் வெளியாகி 20 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 150 கோடிகளையும், உலகெங்கும் கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளையும் அண்ணாத்த வசூலித்தது. 21 நாட்கள் கழித்து படம் நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய இணைய செயலிகளில் வெளியானது. இதன் […]
தொடரும் கன மழை… வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்!
சென்னை: வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 27 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையிலிருந்தே மழை விட்டுவிட்டு பெய்தது. மாலைக்குப் பிறகு இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 […]