சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து, ஜூலை 14-ம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று (ஜூலை […]
Category Archives: தமிழ் சினிமா
லால் சலாம்… படப்பிடிப்பை நிறைவு செய்தார் ரஜினிகாந்த்!
தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று ‘லால் சலாம்’ படத்தில் […]
மாவீரனுக்கு தடையில்லை!
சென்னை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்துக்கு எதிராக ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை […]
16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு மரணம் – பாரதிராஜா, கமல் இரங்கல்
கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ‘கன்னி பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். மேலும், முன்னணி நடிகர்கள் பலரையும் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “16 வயதினிலே’ திரைப்படத்தின் வாயிலாக […]
மாமன்னன்: ரூ 50 கோடிகளைக் கடந்த முதல் உதயநிதி படம்
வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். நடிகராக வலம் வந்த உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்தை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர். இந்தப் படம் அரசியல், கலை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படம் குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளன. படம் குறித்து […]
ராயர் பரம்பரை பட விமர்சனம்
நடிகர்கள்: கிருஷ்ணா, சரண்யா, ராஜேந்திரன், ஆனந்தராஜ் ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு இசை: கணேஷ் ராகவேந்திரா இயக்கம்: ராம்நாத் வேட்டைக்காரன்புதூரின் பெரிய மனிதர் ராயருக்கு காதல் என்றாலே பெரும் வெறுப்பு. காரணம் பல ஆண்டுகளுக்கு முன் அவரது தங்கை காதல் வயப்பட்டு ஒருவருடன் ஊரைவிட்டே ஓடிவிடுகிறார். ஊரில் காதலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் அளவுக்குப் போகிறது அவரது சண்டியர்தனம். அவருக்கு ஒரே மகள். இசைக் கல்லூரியில் பட்டம் படித்துவிட்டு ஊருக்கு வருகிறார். அதே […]
தருணம்… தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனின் இரண்டாவது படம்!
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘தருணம்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது. விழாவில் தயாரிப்பாளர் கோபி பேசுகையில், “அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு பி ஆர் ஓ டீம் மூலம் தான் தெரியும். தேஜாவூ படம் பார்த்த பின் அவரை சந்தித்தேன். இந்தப்படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப்படைப்பை தருவார்கள் […]
ஏவிஎம் மியூசியத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்சுக்குச் சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து […]
திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் சிறப்பு முன்னோட்டம்
உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை […]
அடுத்தடுத்து 3 படங்களில் நாயகன்… ரஜினி பாராட்டு… உச்ச மகிழ்ச்சியில் சூரி!
சந்தானம், யோகி பாபு என நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாக நடிக்கிறார்கள். இப்போது சூரியும் ‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுகுறித்து சூரி அளித்துள்ள பேட்டியில், “நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பிறகு சில இயக்குநர்கள் என்னைக் கதாநாயகனாக நடிக்க வைக்க கதை சொன்னார்கள். அதுவும் நகைச்சுவைக் கதைகளாகவே இருந்தன. மற்ற நடிகர்கள் படங்களில் காமெடி வேடங்களில்தானே நடிக்கிறேன் என்று சொல்லி […]