கோவை: கோவை மாவட்டத்துக்கு 3 நாள் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதல் நிகழ்ச்சியாக இன்று கோவை ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகளழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து விழாவில் […]
Tag Archives: mk stalin
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அரசியல் நாகரீகத்தை இப்போதுள்ளவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தவறுதான்! – முக ஸ்டாலின்
தேனி: தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை பகுதியில் நடந்தது. விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “நாட்டுக்கு உழைக்கவும் நல்ல விஷயங்களைச் செய்யவுமே நமக்கு நேரம் போதவில்லை. தேவையற்றவற்றைப் பேச நமக்கு நேரமில்லை. நம்முடைய தலைவர் கலைஞரிடம் ஒரு பத்திரிகை நிருபர், ‘உங்கள் மகன் ஸ்டாலினைப் […]
துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே இனி நியமிக்கும்! – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். சட்டசபையில் மசோதா குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உயர் கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது. துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும், ஆளுநர் – மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும். துணை […]
‘ ஆங்கிலத்துக்கு பதில் இந்தி?… ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் செயல்’! – அமித் ஷாவுக்கு முக ஸ்டாலின் கண்டனம்
சென்னை: இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார்: ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று […]
டாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்? – முதலமைச்சர் பதில்
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இன்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அணையின் வலது கரையில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து, மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார். தண்ணீர் திறப்பு நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் […]
பாசனத்துக்காக மேட்டூர் அணை திறந்துவைத்தார் முதல் அமைச்சர் முக ஸ்டாலின்!
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன் பெறுகிறது. தமிழகத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு தண்ணீரை அளிப்பதில் மேட்டூர் அணையின் பங்கு மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
ஆளுநருடன் முக ஸ்டாலின் சந்திப்பு: 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் உடன் சென்றனர். ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்தார். […]
பெரியார், அம்பேத்கர் பேசியதைத்தானே திருமாவளவனும் பேசினார்? – முக ஸ்டாலின்
சென்னை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”, என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்ய முயற்சி! – முக ஸ்டாலின்
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “நீட் தேர்வைப் பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் குளறுபடி ஏற்படுகிறது. ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிடில் […]
‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்
சென்னை: பதவிக்காக – ஊழலுக்காக, ‘நீட் தேர்வில்’ தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க […]