50 மில்லியன்… தலைமைச் செயலகம் சாதனை!

இந்தியாவின் முன்னணி ஒளிபரப்பு தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜீ 5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘தலைமைச் செயலகம்’ தொடர், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனைப் படைத்துள்ளது. தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” இணையத் தொடர் கடந்த மே 17ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியானது. தேசிய விருது […]

சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்!

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி(இந்தியததொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி. செ ன்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய’த்துக்கு இளையராஜா மே 20ம் தேதி மாலை அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக […]

இசை பெரிதா? மொழி பெரிதா? – இது வைரமுத்துவின் விளக்கம்

  இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலாஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் தற்கால நிலைமை என்ன, கதைகளின் போக்கு என்ன, திரையரங்குகளின் நிலைமை என்ன, தயாரிப்பாளர்களின் கலவரம் என்ன என்று ஆதங்கத்தைக் […]

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்! – முக ஸ்டாலின் அதிரடி

திருநெல்வேலி: “மக்கள் இடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்ட நாம் நமது சகோதர, சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்” என்று திருநெல்வேலியில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் […]

தேர்தல் அறிவிச்சாச்சு!

  டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 17 வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் […]

“விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” – இயக்குநர் அமீர் விளக்கம்

சென்னை: டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். மேலும் அவரையும், […]

தமிழக விளையாட்டுக் கழகம்!

  நடிகர் விஜய், தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயரிட்டு, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்னும் நிலையில், பொது வாழ்வில் அக்கறை கொண்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் விஜய் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவர் வாக்கை முன்னிறுத்தி இருப்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது! அவர் விடுத்துள்ள அறிக்கையை ஊன்றிப் படித்த போது, […]

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு… இந்துக்கள் கோலாகலம்… பாகிஸ்தான் கண்டனம்!

  அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுவிட்டது. முன்னதாக, அயோத்தி […]

நாட்டை மோசமான நிலையிலிருந்து மீட்க கலையைப் பயன்படுத்துவோம்! – பா இரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தில் நடித்த […]

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது அயலான்!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தி நால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை வழங்காமல் படத்தை வெளியிட கூடாது என எம்.எஸ்.சேலஞ்ச் […]