பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் […]
Category Archives: தமிழ் சினிமா
சரத்குமாரின் 150வது படம் The Smile Man !
அப்போது தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசுகையில், “இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார். திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது: “எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 படங்களுக்கும் மேல் இருக்கும் திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க செய்தது. ஷ்யாமுக்கும் […]
மோகன்லாலின் கிறிஸ்துமஸ் பரிசு பரோஸ்!
ரவிஸ் டாக்டர் பி ரவி பிள்ளை வழங்கும் பரோஸ் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந் நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… “மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்றுதான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் […]
தொடங்கியது செல்வராகவன் – ஜிவியின் மென்டல் மனதில்!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ஜிவி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘ மெண்டல் மனதில் ‘ எனும் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் […]
யு ஐ பட விமர்சனம்
வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்த உபேந்திரா, ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்திருக்கும் படம் யு ஐ. அதாவது உலகளாவிய நுண்ணறிவு. ‘புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுங்கள்’ என்று அறிவிதுவிட்டுத்தான் படத்தை தொடங்குகிறார் உப்பி. கதைப்படி அவர் ஒரு திரைப்பட இயக்கநர். அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்துப் பிடித்தது போல் ஆகிறார்கள். அந்தப் படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் தடை செய்ய […]
‘கூரன்’ திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு: மேனகா காந்தி வேண்டுகோள்!
கூரன் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் […]
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் விடுதலை 2
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் விடுதலை என்ற பெயரில் வெளியாகி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியா தவிர, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான […]
கிருஷ்ணா நடிக்கும் மலை!
யோகிபாபு , லக்ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக […]
ரஜினியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ‘லக்கி பாஸ்கர்’
லக்கி பாஸ்கர் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று புதன்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக […]
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் வேட்டையன்!
லைகா நிறுவனத் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி இதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்தப் படம் உலகெங்கும் நாளை 7000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் […]