நமது சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 மடங்கு பெரியது. அதாவது 1300 பூமிகளை வியாழனில் அடக்கிவிடலாம். இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பிரம்மாண்ட கோள் தான் நாளை மறுநாள் பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் சூரியன் மேற்திசையில் மறையும் போது வியாழன் கோள் கீழ் திசையில் தெரிகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1963 ஆம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் நிகழ்ந்திருக்கிறது. அப்போது வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது 59 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் காணலாம். அப்போது வியாழனை சுற்றிவரும் நான்கு துணைக்கோள்களையும் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியிலிருந்து 36 கோடி மைல் தொலைவில் உள்ளது வியாழன் கிரகம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *