சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *