திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நூறு நாட்களைக் கடந்துள்ளது; இன்றும் சாதனைகளை விளக்கி நாளிதழ்களில் விளம்பரங்கள் தொடர்கின்றன. ஆளவந்தாருக்கு வேண்டியவர்கள் ஆதரவாகவும், எதிர்க்கட்சியினர் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக பார்த்தோம் எனில் ஆட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை என்பதையே நாம் மீண்டும், மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சட்டமன்றத்தில் வெளிநடப்புகள் தொடங்கிவிட்டன; இப்போது வெளியில் அதிமுக. சட்டைக் கிழிப்பு காட்சிகள் அரங்கேறும் நாளை விரைவில் நாம் சந்திக்க நேருமோ? […]
Tag Archives: Tamilaruvi Manian
இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றவில்லை… கொள்கை பேசிக் கொள்ளை அடிக்கவில்லை! – தமிழருவி மணியன்
தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்? என்பது ஒரு வாசகரின் விவரமறியாத விடலைக் கேள்வி. கடந்த கால அரசியல் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில்கூடப் பார்க்கத் தெரியாத கழுகார் ‘ இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ போகிறேன்.. வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’என்று எள்ளல் தன்மையோடு பதில் அளித்திருக்கிறார். ஐம்பதாண்டுகளுக்கு மேல் சில மேலான இலட்சியங்களுக்காக ஒரு முழு வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டவனின் வலி கழுகறிய வாய்ப்பில்லை. வானத்தில் வட்டமிட்டாலும் கழுகின் பார்வை மண்ணில் […]
‘சமூக ஊடகங்கள் ஏன் இப்படி பாழ்பட்டுக் கிடக்கின்றன?’ -தமிழருவி மணியன் வேதனை
திரு தொல். திருமாவளவனைத் தாக்கி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை வெளியிட்டு அதன்கீழ் என் படத்தையும் எந்த மனநோயாளி போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு தவறான மனிதரையும் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஒரு வார்த்தையைக் கூடப் பேசியதுமில்லை; எழுதியதுமில்லை. சமூக ஊடகங்கள் ஏன் இந்த அளவு பாழ்பட்டுக் கிடக்கின்றன என்று எனக்குப் புரியவில்லை. கழிப்பறை எழுத்துகள் விமர்சனம் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்படுவதும் யாரும் யாரையும் […]