கடலூரில் ‘ஜெயிலர்’ சூட்டிங்கில் ரஜினி: நேரில் பார்க்க அலைமோதும் ரசிகர்கள்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் என்ற கிராமத்தின் அருகே நடைபெற்று வருகிறது. புதுவை மாநில […]

ரஜினியைச் சந்தித்த சரத்குமார்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன், ரஜனியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார்.   இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]

மீண்டும் ரஜினிகாந்த் – மணிரத்னம்?

முதன்முறையாக ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. இன்று வரை அனைத்து சினிமா ரசிகர்களின் அபிமானத்துக்குரிய படமாகத் திகழ்கிறது தளபதி. இந்திய சினிமாவின் முக்கியத் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதன்பிறகு இருவரும் இணையவே இல்லை. அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில், பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடிக்க தான் முன்வந்ததாகவும், ஆனால் ரசிகர்களை மனதில் வைத்து, மணிரத்னம் மறுத்துவிட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கப்போவதாக செய்திகள் […]

ஜெயிலர்…. ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸே, நடிகர் நடிகைகள் பட்டியலை ஒ்ரு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. The cast of #Jailer💥Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy — Sun Pictures (@sunpictures) August 24, […]

ஜெயிலர்… தொடங்கியது படப்பிடிப்பு!

சென்னை: அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. இதனை ரஜினிகாந்தின் முதல் தோற்றப் படத்தை வெளியிட்டு, அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினியுடன் சிவராஜ் […]

மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்! – மக்களுக்கு ரஜினி வேண்டுகோள்

சென்னை: நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, இன்று (13-ந் தேதி) முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி […]

ஆளுநருடன் அரசியல் பேசினேன்… ஆனால் உங்களிடம் சொல்ல முடியாது! – ரஜினிகாந்த்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது: “கவர்னருடனா சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என கவர்னர் ரவி கூறினார். காஷ்மீரில் பிறந்து, அதிக […]

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா… நேரில் சென்று ரசித்துப் பார்த்த ரஜினி!

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ‘ஃபோர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்’ என்ற 5 நட்சத்திர அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் […]

இன்று முதல் செஸ் ஒலிம்பியாட்… வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் […]

தொடங்கியது சந்திரமுகி 2 படப்பிடிப்பு… ராகவா லாரன்சுக்கு ஆசி வழங்கிய ரஜினி!

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை […]