ஹைதராபாத்: 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு 1-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியை பிடிப்பதற்காக பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரையிலான தலைவர்களை பாஜக களம் இறக்கியது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு முதல்-மந்திரி கே.சந்திரசேகர்ராவும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒவைசியும் பிரசாரம் செய்தார்கள். டி.ஆர்.எஸ். கட்சி 150 வார்டுகளிலும், பா.ஜ.க. 149 வார்டுகளிலும், காங்கிரஸ் 146 வார்டுகளிலும், தெலுங்குதேசம் கட்சி 106 வார்டுகளிலும், ஒவைசி கட்சி 51 வார்டுகளிலும் […]