பொன்னியின் செல்வன் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இணைய வெளியெங்கும் பொன்னியின் செல்வன் விமர்சனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் வியப்பு கலந்த பாராட்டுகள்.. கொஞ்சம் எதிர்மறை… அவற்றில் பெருமளவு வன்மம். இந்த வன்மம் கலைக்கே ஆபத்தானது. ஒருவித மனநோய். சமூக ஊடகங்களில் இவர்களின் ஆதிக்கமே அதிகம்! சரி, கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கிய விதத்தில் குறைகளே இல்லையா… இருக்கின்றன. குந்தவை – வந்தியத்தேவன் பழையாறைச் சந்திப்பின்போது, அப்போதுதான் முதன்முதலில் பார்த்துக் கொள்வதைப் போல இருவரின் பேச்சும் […]