விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் முன்னோட்டம் வெளியீடு!

1

மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

‘கோலி சோடா’ , கோலி சோடா 2 படநகளுக்குப் பிறகு தமிழில் படம் இயக்காமல் இருந்த விஜய் மில்டன், 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி – விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

இளையராஜாவின் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலுடன் தொடங்குகிறது மபிம ட்ரெய்லர். தன்னுடைய கடந்த காலங்களை மறைக்க புதிய ஊர், புதிய மனிதர்களுடன் வாழ்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு இருக்கும் ஒரே ப்ளாஷ்பேக் சரத்குமார். நாயிடம் அன்பு காட்டுவது என அவரின் கருணையுள்ளம் உணர்த்தப்படுகிறது. அவரின் மறுபக்கம் குறித்த தேடலை புதிராக காட்டுகிறது ட்ரெய்லர்.

டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மனதில் பதியும்படி உள்ளன.

இந்த முன்னோட்டப் படதின் இடையிடையே, ‘உறவுகள் தொடர்கதை’ பாடலின் துணுக்குகள் வருவது ஈர்ப்பைத் தருகிறது. படம் ஜூலையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.