சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 7-ந்தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும். ஆனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று காய்ச்சல் […]
Category Archives: கொரோனா (கோவிட் 19)
தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,56,917 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 532 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் […]
பிரிட்டன் விமானங்களுக்கு டிசம்பர் 31 வரை தடை… இந்தியா அறிவிப்பு!
டெல்லி: பிரிட்டனில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த முறை 70 சதவீதம் தொற்று அபாயம் உள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதேபோல், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. பல்வேறு உலக நாடுகளும் தடையை அறிவித்து வருகின்றன. இதையடுத்து, இந்தியாவும் […]
அதிவேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ்…. பிரிட்டிஷ் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை!
லண்டன்: கொரோனா தாக்கம் குறைந்த பிறகு இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை காலத்தில் […]
கொரோனா: ஜெர்மனியில் கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முழு முடக்கம்!
பெர்லின்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவியது. அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. எனினும் மே மாதத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த […]
டிசம்பரில் கொரோனா பாதிப்பு மோசமாக இருக்கும்! – உச்ச நீதிமன்றம்
டெல்லி: வரும் டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய கொரோனா பரவல் இருக்கலாம் என நாங்கள் கேள்விப்படுகிறோம். எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒரு சமீபத்திய அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நாங்கள் கேட்டு கொள்கிறோம் .கொரோனா பரவலுக்கு மாநிலங்கள் தயாராக இல்லை என்றால் டிசம்பர் மாதத்தில் மோசமான பாதிப்புகள் நடக்கக்கூடும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலம் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது. […]
உலகம் முழுவதும் ஒரே நாளில் 5.80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
ஜெனீவா: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,89,70,525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,07,59,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 93 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் […]
95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அவற்றில் ரஷ்யா முதல் முறையாக கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைப் பயன்பாட்டுக்கும் விட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது மாடர்னா நிறுவனம் தனது புதிய தடுப்பு மருந்தினை அறிவித்துள்ளது. இது தங்களுக்கு `சிறந்த ஒரு […]
கோவிட் 19: அடுத்த இரு மாதங்கள் மிகக் கடினமானவை! – உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்யாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையை கையாள்வது அவசியம் எனவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் […]
‘கொரோனா… இனிமேல்தான் ஆபத்து ரொம்ப அதிகம்!’ – பிரபல மருத்துவர் எச்சரிக்கை
உலகெங்கும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது போல் செய்திகள் வருகின்றன. நம்மில் பலரும், உற்றார் உறவினர் இதனால் பாதிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து, அலட்சியம் கூடி வருகிறது… இன்னும் ஒரு மாதத்தில் இதன் தீவிரம் கூடும் அபாயம் இருக்கிறது. பல மருத்துவர்கள், தொலை-சிகிச்சை முறையில் இணைய-கணினி வழியாகவே பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, பேசி, சிகிச்சைகள் பரிந்துரைக்கிறார்கள். என்னால் அது முடியவில்லை. என்னிடம் வருபவர் எப்படி உள்ளே நுழைகிறார் என்பதிலிருந்து நான் சொல்வதற்கு என்ன […]