பிரிட்டன் விமானங்களுக்கு டிசம்பர் 31 வரை தடை… இந்தியா அறிவிப்பு!

1

டெல்லி: பிரிட்டனில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த முறை 70 சதவீதம் தொற்று அபாயம் உள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அதேபோல், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. பல்வேறு உலக நாடுகளும் தடையை அறிவித்து வருகின்றன. இதையடுத்து, இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது.