28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற முழக்கத்தோடு திரையில் களம் இறங்கி இருக்கிறார் இந்தியன் தாத்தா. முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற இந்தியன், மீண்டும் வரமாட்டாரா… நாட்டில் தலை விரித்தாடும் லஞ்சம், ஒழுங்கின்மையை களையெடுக்க மாட்டாரா என ஏங்கும் ஒரு இளைஞர் கூட்டம், சமூக ஊடகம் மூலம் அவருக்கு விடும் அழைப்பு உலகெங்கும் வைரலாகிறது. தைவான் தலைநகர் தைபேயில் வர்மக் கலை கற்றுத் தரும் பயிற்சி மையம் வைத்திருக்கும் இந்தியன் […]
Category Archives: இன்றைய பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை! – பொற்கொடியிடம் முதல்வர் முக ஸ்டாலின் உறுதி
சென்னை: சென்னை பெரம்பூரில் இரு தினங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங். அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கொலைச் சம்பவம். அரசியல் கட்சித் தலைவர் அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். பெரும்பாலும் தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும் என்பதாகவே அக்கருத்துகள் இருந்தன. இந்த நிலையில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். அப்போது […]
ஆதரவளித்த தலித் மக்களை அலட்சியப்படுத்துகிறதா திமுக அரசு? – பா இரஞ்சித்
இயக்குநர் பா இரஞ்சித்தின் அறிக்கை: கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்! இதனையொட்டி திமுக […]
பிச்சை… நாய்… சர்ச்சை: ஆர் எஸ் பாரதி விளக்கம்!
குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.” நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி […]
கள்ளச்சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
சென்னை: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, […]
தனி பெரும்பான்மை இல்லை… கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக: 3-வது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி!
டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. […]
பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்
: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. முன்னணி நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், யோகி பாபு l உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. கடந்த மார்ச் 15ம் தேதி, மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு […]
தேர்தல் அறிவிச்சாச்சு!
டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 17 வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் […]
“விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” – இயக்குநர் அமீர் விளக்கம்
சென்னை: டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். மேலும் அவரையும், […]
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு… இந்துக்கள் கோலாகலம்… பாகிஸ்தான் கண்டனம்!
அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுவிட்டது. முன்னதாக, அயோத்தி […]