புலவர் புலமைப்பித்தன்!

2

வியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்குப் பிறகு, மிகப் பிடித்த பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தன்தான். அவரது பாடல்கள் அனைத்துமே தனித்துவமும் கவிச்சுவையும் மிக்கவை.

அவர் எழுதிய முதல்பாடலே ‘நான் யார் நான் யார்… நீ யார்’ என குடியிருந்த கோயில் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதியதுதான். அதன் பிறகு எம்ஜிஆருக்கு அவர் எழுதிய அத்தனைப் பாடல்களும் தித்திக்கும் தேன் என்றால் சற்றும் மிகையல்ல!

ஒரு சின்ன லிஸ்ட் பாருங்கள்…

ஆயிரம் நிலவே வா…
எங்கே அவள்…
பாடும் போது நான் தென்றல்காற்று…
அங்கே வருவது யாரோ…
நீ என்னென்ன சொன்னாலும்…
நீங்க நல்லா இருக்கணும்…
இன்பமே உந்தன் பேர்…
பொன்னந்தி மாலைப் பொழுது…
நாளை உலகை ஆள வேண்டும்
இந்தப் பச்சைக் கிளிக்கொரு…
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஓடி ஓடி உழைக்கணும்…
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…
உனது விழியில் எனது பார்வை…
ஒன்றே குலம் என்று…
ஒன்றே சொல்வான்…
சொர்கத்தின் திறப்பு விழா
புதியதோர் உலகம் செய்வோம்
தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்

எம்ஜிஆர் சகாப்தத்துக்குப் பிறகு, பல இசையமைப்பாளர்களின் இசையில் அவர் பாடல் எழுதியிருந்தாலும், இளையராஜா இசையில் எழுதிய அத்தனையும் தமிழ் அமுதம் எனலாம்.
எத்தனை எத்தனை அற்புதமான பாடல்களைப் படைத்திருக்கிறார் புலவர்.
அந்தப் பட்டியல் பெரியது.

அவற்றில் சில…

பூவிழி வாசலில்…
உச்சி வகுந்தெடுத்து…
அமுதே தமிழே…
செவ்வந்திப் பூக்களில்…
சங்கத்தில் பாடாத…
மாலைக் கருக்கலில்…
ராத்திரியில் பூத்திருக்கும்
ஓ வசந்த ராஜா…
விழியிலே மணி விழியில்…
தாழம்பூவே வாசம் வீசு…
நாளும் என் மனம்…
வெள்ள மனம் உள்ள மச்சான்…
கண்மணியே பேசு…
வெண்மேகம் விண்ணில் நின்று…
ஓ வானம்பாடி…
எந்தன் உயிரின் உயிரே…
தென்பாண்டிச் சீமையிலே…
அந்திமழை மேகம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
உன்னால் முடியும் தம்பி
அக்கம் பக்கம் பாரடா சின்னராசா
மாமரத்துக் குயிலு…
அடி வான்மதி…
இருவிழியின் வழியே…
இதழ் சிந்தும் முத்தங்கள்…
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
கல்யாணத் தேன் நிலா…
மழை வருது மழை வருது..
வாசக் கறிவேப்பிலையே…
அதோ மேக ஊர்வலம்
எதிலும் இங்கு இருப்பான்…
ஆத்தோரத்திலே ஆலமரம்…
கஸ்தூரி மானே மானே
குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா…
பூங்குயில் ரெண்டு…

இன்று (8.09.2021) அமரராகிவிட்ட புலவர் புலமைப்பித்தன் (86) புகழ், தமிழ் போல் வாழும்!