சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

மே 2 ந்தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி

முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி

உணவகங்களில் காலை 6 – 10 மணி, மதியம் 12 – 3 மணி, மாலை 6 – இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி

காலை 6 – 10 மணி, மதியம் 12 – 3 மணி, மாலை 6 – இரவு 9 மணி வரை, உணவு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *