ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ என்ற படத்தை சுில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தனர். சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் வெற்றிமாறன் முதல் முறையாக இணைகிறார் என்ற செய்தி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

குறுகிய காலத் தயாரிப்பாகத்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது இந்தப் படம். ஆனால் கோவிட், கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே போனது.
தற்போது ‘விடுதலை’ படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடுதலை’ முதல் பாகத்தின் பின்தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், முன்னோட்டம் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *