சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 617 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 24,981 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையில் 607 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,677 ஆக உயர்ந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *