சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இருவரும் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தனர்.

பேசி முடித்ததும் அங்கிருந்து புறப்பட இளையராஜா தயாராகியுள்ளார். அப்போது, “சாமி, இப்போ எங்கு செல்கிறீர்கள்?” என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். தனது இசைப் பதிவுக் கூடத்தில் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற உள்ளதாக இளையராஜா கூறியுள்ளார்.

அப்போது தானும் உடன் வருவதாக தெரிவித்த ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை ஒத்திகை நடக்கும் இசைக் கூடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்தபடி இளையராஜா தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை ரஜினிகாந்த் கண்டு ரசித்தார். இவர்களது சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *