கொழும்பு: நான் இலங்கையில் பிறந்தது எனது தவறா என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வெளிஆனதிலிருந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இறுதிப் போரின்போதும், பின்னர் வந்த காலங்களிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கும், இனப்படுகொலையாளன் ராஜபக்ச கூட்டத்துக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள், […]