மும்பை டெஸ்ட்: நியூஸிலாந்தை புரட்டி எடுத்த இந்திய அணி… மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்!

மும்பை: இந்தியா – நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் ட்ராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து […]

மும்பையில் தொடரும் கனமழை, வெள்ளம்… ‘வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!’

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை, புறநகர் மற்றும் தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அனைத்து தெருக்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மும்பையில் ஜூன் மாதத்தில் பெய்ய […]