இப் படம் குறித்த முழு அறிவிப்பு அக்டோபர் முதல் தேதியன்று வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில்தான் உருவாகவிருக்கிறதாம்.

இந்தநிலையில், தலைவர் 170 புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் (4-ம் தேதி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட தென்னிந்திய முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *