தமிழ் சினிமாவில் அனைத்துத் திறமைகளும் நிரம்பிய ஆணழகன் நடிகர் என்றால், அவர் பிரஷாந்த் தான். உலகெங்கும் வாழும் ஏராளமான தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவர். வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், பொன்னர் சங்கர் என தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத திரைப்படங்களின் நாயகன்.

இப்போது அவரது நடிப்பில் அந்தகன் படம் வெளியாகவிருக்கிறது. இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் வடிவம்தான் அந்தகன். பிரஷாந்துடன் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்தப் படத்தில் தோன்றுகிறது. கார்த்திக், சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, சமுத்திரக்கனி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், மனோபாலா என அந்தப் பட்டியல் பெரியது.

இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தில் பியானோ கலைஞராக நடித்துள்ளார் பிரஷாந்த். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி எஸ் தாணு பெற்றுள்ளார் என்பதே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பெரிதும் அதிகரித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *