சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மார்ச் 1-ம் தேதி வியாழன் கிழமை தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு ஒரு நாள் முன்பாகவே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்”.

இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இளையராஜா வாழ்த்து

ஓங்கு புகழோடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் ஒரு இசைக் கச்சேரியில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து வீடியோ மூலம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருப்பதாவது: “தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, நிறைந்த செல்வத்தோடு, ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *