டி 20 உலகக் கோப்பை… இந்திய அணி அறிவிப்பு

2

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி பிஷ்னாய், தீபக் சாஹர்

டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.