சென்னை: ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

அந்த வீடியோவைப் பற்றி அவர், “நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்” என்று பதிவிட்டுள்ளார். தான் அமெரிக்காவில் இருந்தும் இளையராஜா ஹங்கேரியில் இருந்தும் திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் இளையராஜாவையும் ரகுமான் டேக் செய்துள்ளார். அந்த வீடியோவில் ரகுமான் அருகில் சிரித்தபடி செல்பிக்கு காட்சி தருகிறார் இளையராஜா.

இந்த இன்ஸ்டா பகிர்வு சிறிது நேரத்துக்கெல்லாம் சமூக வலைத் தளங்களில் தீப்பரவலாகப் பரவியது. ஊடகங்களில் செய்திகளாகவும் பரபரத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாலையில் தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார் ரகுமான். 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *