கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் அறிவித்து இன்று 20-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைனின் பிடிவாதம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவி காரணமாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (செவ்வாய்) முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கீவ் நகர் நோக்கி ரஷிய படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *