சையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், சர்வதேச அளவில் ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார். தற்போது அடுத்த கட்டமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜனிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *