சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் உடன் சென்றனர்.

ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சந்திப்பதாக இருந்தது. ஆனால், அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *