400 கோடியைக் கடந்த வேட்டையன்!

2

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் வேட்டையன்.

அக்டோபர் 10ம் தேதி உலகெங்கும் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது.

படம் வெளியான 4 நாட்களில் 240 கொடியைக் குவித்தது வேட்டையன். இடையில் மழை குறுக்கிட்டாலும், படத்துக்கு தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.

இதன் விளைவாக உலகெங்கும் இந்தப் படம் 23 நாட்களில் ரூ 400 கோடியை வசூலித்து, இந்த ஆண்டின் நம்பர் 1 படமாக மாறியுள்ளது. அண்டை மாநிலங்களிலும் வேட்டையனுக்கு நல்ல ஆதரவும், வசூலும் கிடைத்துள்ளது.