அயலான் முன்னோட்டப் படம் எப்படி?

2

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது.

இவரிடம் 2018-ம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கதை சொல்லி, அயலான் படம் ஆரம்பம் ஆனது. விஞ்ஞானக் கதையாக உருவாகி வந்த இந்தத் திரைப்படம் கொரோனா ஊரடங்கு மற்றும் அதிகபட்ச வரைகலைப் பணிகள் காரணமாக பல வருடங்களாக பின் தயாரிப்பு பண்களில் இருந்தது.

இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட வரைகலைக் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது

ட்ரெய்லரை பார்க்கும் போது, நிச்சயம் இந்தப்படம் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் பிடித்த படமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. கணிணி வரைகலைக் காட்சிகளும், பிரமாண்டமும் படம் பார்க்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டுவதாக உள்ளது. சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கைில் அடுத்த கட்டமாக இந்தப் படம் அமையும் என்ற நம்பிக்கையை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அயலான் முன்னோட்டம்: