1000 கோடி வசூலில் புயலைக் கிளப்பும் ஷாருக்கானின் ‘ஜவான்’!

2

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன், இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமிதத்தையும் ஷாரூக்கான் பெற்றிருக்கிறார்.

‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை மறு வரையறை செய்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.