என்றும் என்றென்றும்!

2

ஜினிகாந்த் – இளையராஜா…

இந்த இருவரின் திரைப்பயணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் தொடங்கியது. ஒரு ஆண்டு முன்னே பின்னே. இருவருமே அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை திரையுலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கிறார்கள். விரைவில் திரைத்துறையில் பொன்விழா காணவிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்த நூற்றுக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ரஜினி – இளையராஜா கூட்டணியில் உருவான 99.99 சதவீத படங்களில் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றிருக்கின்றன.

ஆனால் வீரா படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இளையராஜாவும் ரஜினியும் இணையவே இல்லை. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பது அவர்களின் ரசிகர்களுடைய நீண்ட நாள் விருப்பமாக இருந்துவருகிறது.

ரஜினியும் இளையராஜாவும் திரையில் இணைந்து பணியாற்றுவது இடையில் நின்றுபோயிருநாதாலும், இருவருக்குமான தனிப்பட்ட நட்பு அத்தனை நெருக்கமானது. இன்னும் அப்படியே தொடர்கிறது. அண்மையில் கூட இளையராஜா புதிதாகத் தொடங்கிய இசைக் கோர்ப்புக் கூடத்துக்கு இருமுறை ரஜினி சென்று நெடுநேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்ததும், இசைக் கோர்ப்புப் பணிகளை அருகிருந்து ரசித்ததும் நினைவிருக்கலாம்.

ரஜினியும் இளையராஜாவும் இந்த முறை இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரஜினியின் புதிய படத்துக்கு வேறு இசையமைப்பாளர் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனாலும் ரஜினியின் 170வது படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளது என்று இப்போது பேசி வருகின்றனர்.

இந்த சூழலில்தான் இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் ரஜினியும் எண்பதுகளில் எடுத்த படம் ஒன்றை, ‘என்றும் என்றென்றும்’ என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களில் இணையவெளி எங்கும் பரபரப்பாக பகிரப்பட்டது. அனைத்து செய்திச் சேனல்களும் இந்தப் படத்தை வெளியிட்டு செய்தியாக்கின. ராஜா – ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ‘நாங்க அப்பவே சொன்னோம்ல’ என்ற தொனியில் சமூக வலைப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.