டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் படத்தின் பெரிய பின்னடைவே நீளம் அதிகமாக இருப்பதுதான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பெரும்பாலான விமர்சனங்களிலும் இந்தக் கருத்து இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் கோப்ரா’ படத்தில் 20 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டு, படத்தை விறுவிறுப்பாக்கி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் அறிவித்துள்ளது. ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நீளம் குறைக்கப்பட்ட படமாக இன்று முதல் கோப்ராவை திரையரங்குகளில் பார்க்க முடியும்.

‘இந்த முடிவை படம் வெளியாகும் முன்பே எடுத்திருக்க வேண்டும். 2.30 மணி நேரப் படமாக கோப்ராவை கச்சிதமாகத் தந்திருந்தால், இப்படி கலவையான விமர்சனங்களே வந்திருக்காதே’ என்கிறார்கள் திரையரங்க நிர்வாகிகள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *